ராமநாதபுரம்: உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்தது. அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முதல் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.