திருப்பூர்: திருப்பூர், பி.என். ரோடு, வெங்கடேசபுரம், ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு விழா அலகு வீரர்கள் அலகு சேவையுடன் துவங்கியது.விழா துவக்கமாக, எஸ்.வி., காலனி மாப்பிள்ளை விநாயகர் கோவிலிலிருந்து, அலகு வீரக்குமாரர்கள் அலகு சேவையுடன் அம்மன் சக்தி அழைப்பு நடந்தது. இதில், பக்தர்கள் அலகு ஏந்தி, கத்தி ஏந்தியவாறு சக்தி அழைத்து வந்தனர்.தொடர்ந்து கோவில் வளாகத்தில் நவராத்திரி கொலு துவங்கியது. வரும் 21 ம் தேதி வரை, தினமும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி விழா நடைபெறுகிறது.