பதிவு செய்த நாள்
11
அக்
2018
01:10
மயிலம்:மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா யாகசாலை வழிபாடு கலச பூஜை, ஸ்ரீலலிதா சகஸ்கர நாமார்ச்சனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 9 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வரும் 18 ம் தேதியன்று மாலை 6:00 மணிக்கு மடத்தில் உள்ள அரிய பழைய நுால்கள், ஒலை சுவடிகள், சரித்திர சின்னங்கள், வீரசைவ ஆகம வேத தமிழ் இலக்கிய நுால்கள் கொலுவில் வைத்து சரஸ்வதி பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.