Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரபஞ்சத்தோற்றத்தில் பிராணன்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 51. பிராணன் யாது?
மனிதனில் பிராணன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
03:10

மனிதன், தான் இயங்குவதற்கு இப்பிரபஞ்சத்திலிருந்தே "சக்தியினை மூச்சாக இழுத்துக் கொள்கிறான். அந்த "சக்திதான் பிராணன் எனக் கூறப்படுவதாகும். உயிரற்ற ஒருவனால் மூச்சை இழுத்து விட வெளிவிட முடியாது. எனவே, உயிர் என்பது வேறொன்றாகிறது. எனவே பிராணன் என்பதும் உயிர் என்பதும் ஒன்றல்ல, வேறு வேறு ஆகும். பிராண இயக்கத்திற்குப் பிராண வாயு தேவைப்படுகிறது.

உடல் இயக்கத்திற்குப் பிராணனும் அப்பிராணனுக்கு பிராணவாய்வும் என இம்மூன்றும் சேர்ந்து தொழிற்படுவதே மனித உடலியக்கமாகும். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகும்.

உயிர்: உயிர் என்பது பற்றி விஞ்ஞானம் இதுவரை ஒரு சரியான முடிவுக்கு வரவில்லை அல்லது வரமுடியவில்லை. உடல் இயங்கும் வரை உயிர் இருப்பதாகவும், இயக்க முற்று நின்று போனவுடன் உயிர் போய்விட்டதாகவும் கூறுகின்றனர். அதை மரணம் என்று கூறும் முன்பாக, அம்மரணத்தை நிகழாதிருக்கச் செய்யமுடியவில்லை. உயிரைத் தனியாக அடையாளம் கண்டுவிட்டால், உடலில் அது எங்கிருக்கிறது என முடிவு செய்துவிட்டால் அது வெளிப்போகாமல் தடுத்திடலாம் அல்லவா? உடலுள்ளுறுப்புகள் செயல்திறமை குறைபாட்டில் அல்லது செயல்திறன் முற்றும் கோளாறுடையவர்கள் இறக்கும் நிலைக்குப்போய் பிழைத்து விடுவதும் மிகச்சிறிய கோளாறு காரணமாக இறப்பதும் ஏன்? மரணத்தை கிளினிக்கல் டெத், பிரைன்டெத் என்று கூறுகிறது விஞ்ஞானம்.

உடல்

ஒரு "சிசு கற்பத்தில் தோன்றியது முதல் இயல்பான வளர்ச்சிக்குப்பின் வயிற்றினின்றும் வெளிவரும் வரை அச்சிசு வேறு ஒரு உயிரைச் சார்ந்தே வளர்கிறது. வெளிவந்த பின் சுவாசிக்கத் தொடங்கியது முதல் தன் உடல் வளர்ச்சிக்கு வித்திடுகிறது எனலாம். அதன் உடல் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறுகிறது. அதற்கு வளர்சிதை மாற்றப்பண்புகளின் இயக்க இயல்பும் அடிப்படையாகிறது. இந்த மாற்றப்பண்புகளுக்கு உணவும்-காற்றும் தொடர்ந்து தேவைப்படுகிறது. இவ்வுடல் வளர உயிரின் பங்கு என்ன? உயிருக்குப் பரிமாணம் உண்டா? விஞ்ஞானத்தில் இதற்கு சரியான பதிலில்லை. வளர்ச்சி ஒரு இயற்கை நியதி என்று மட்டும் கூறுகிறது.

பிராணன்

காற்று வாய்வு -ஆக்சிஜன் என்ற ஒரு குதிரையின் மீது சவாரி செய்து கொண்டிருப்பதே பிராணனாகும். இப்பிரபஞ்ச உயிர்கள் அசையும் அணுப்பொருட்கள் என அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவை காற்று ஆகும். இக்காற்று, உயிர்களுக்கு தக்கவாறு எடுத்துக்கொள்ளும் அளவில் மாற்றம் இருக்கலாம், ஆனால் அது இன்றி பிராணன் செயல்பட முடியாது. உயிரை ஜீவன் என்று கூறப்புகுவோமெனில், பிராணன் ஜீவசக்தி என்று கூறுதல் சரியாகும்?

மனிதனில் பிராணன்

புலன் உணர்வுகள் தூண்டப்படுவதற்கும், அதற்கேற்றபடி செயல்படவைப்பதும் பிராணனே. அறிவு, புத்தி, சித்தம், மனம், உடலனுபவம் அனைத்தும் பிராணன் இயங்குவதாலயே இயக்கம்பெறுகிறது.

கோள்களில் பிராணன்

பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்களின் இயக்கத்திற்கும் காற்று, மழை, மின்னல், இடியோசை என அத்தனை இயற்கையின் இயக்க நிகழ்வுகளுக்குள்ளும் பிராணனின் செயல்பாடு அல்லது பிராணச் சலனமே காரணமாகும்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 51. பிராணன் யாது? »
ஏதுமற்ற ஒன்றிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. எத்தோற்றத்திற்கும் ஒரு (முன்) ""இருப்பு இருந்ததாலயே ... மேலும்
 

பிராணாயாமம் அக்டோபர் 12,2018

பிராணன் செயல்படப் பிராண வாயு துணை செய்கிறதென முன்பார்த்தோம். மனித உயிர்கள் அவ்வாயுவினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar