பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
திருவேங்கடம் :கரிவலம்வந்தநல்லூர் ஆதிமூல அய்யனார் உத்தண்டகாளை சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று (7ம் தேதி) துவங்குகிறது. கரிவலம் வந்தநல்லூர் ஆதிமூல அய்யனார் உத்தண்டகாளை சுவாமி கோயில் 100 ஆண்டுகளுக்கு பின்பு சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடத்தி கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (7ம் தேதி) துவங்குகிறது. மாலை 5.30 மணிக்கு மங்கள இசை, சகல தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி பூஜைகள், வாஸ்து ஹோமம், பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. நாளை (8ம் தேதி) காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி, அஷ்டலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், கோமாதா, சுமங்கலி தம்பதி, பிரும்மசாரி பூஜைகள், மாலை 5.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலச நிர்ணயம் தீர்த்த சங்கமம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை 7.30 மணிக்கு புண்யாகவாசனம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், பிம்பசுத்தி பூஜைகள், சயனாதிவாச பூஜைகள், பூர்ணாகுதி, மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பஞ்சபாலிசா, யந்திர பூஜைகள், 3ம் கால யாகங்கள், யந்திரபிம்பம், பிரதிஷ்டைகள், பூர்ணாகுதி ஆகியன நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, பிம்ப ரக்ஷாபந்தனம், சோம சூர்ய பூஜைகள், 4ம் கால யாகங்கள், ஸ்பர்ஸாகுதி, நாடிசந்தானம், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்படுதல், தொடர்ந்து 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் உத்தண்டகாளை சுவாமி மற்றும் பூர்ணா பொற்கொடி சமேத அய்யனார், பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம், பின்பு சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கேரள பிரசன்ன ஜோதிடம் வேதகாம விற்பன்னர் சர்வசாதகம் கண்ணன் போத்தி நடத்துகிறார். ஏற்பாடுகளை கரிவலம்வந்தநல்லூர் உத்தண்டகாளை சுவாமி கோயில் திருப்பணி குழுவினர், நிர்வாகி கோமதிநாயகம் செய்துள்ளனர்.