செஞ்சி:செஞ்சி கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீராம பஜனை நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர், கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீராம பஜனை சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. ஸ்ரீராம பஜனையில் ராமமூர்த்தி திருமால் வணக்கம் செய்தார். அறக்கட்டளை நிர்வாகி பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஜெயராமன் தலைமை தாங்கினார். ஜனார்த்தனன் சிறப்புரை நிகழ்த்தினார். நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டு நடந்தது.விழா குழுவினர் எட்டியப்பிள்ளை, சாமிகண்ணு, பெருமாள், அருணகிரி, அப்புபிள்ளை, வேணுகோபால், லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.