கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவிலில், மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு மக்கள் சார்பில், புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு, சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவிலில், சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பலர், தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். பூஜையில், 300க்கு மேற்பட்டோர் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.