ஈரோடு: அகில இந்திய, இந்து மகா சபா, ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாநில பொது செயலாளர் தொல்காப்பியன் தலைமை வகித்தார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். இந்து கடவுள், இந்து கோவில்களை இழிவுபடுத்தி பேசிவரும், மோகன் சி லாசரஸ் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.