பதிவு செய்த நாள்
15
அக்
2018
01:10
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில், காலம், காலமாக ஏராளமானோர், எளிய முறையில் திருமணம் செய்கின்றனர். இவர்கள் முறையாக பதிவு செய்வதில்லை.
இந்நிலையில் கூடுதுறை பகுதிகளில், திருமணம் நடத்த அனுமதியில்லை என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: சட்டத்துக்கு புறம்பான திருமணங்கள் நடப்பதை தடுக்கவே, தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதுறையில் திருமணம் செய்பவர்களுக்கு, இனி கோவில் நிர்வாகம் சான்று வழங்காது. குறிப்பாக, இளம் வயது திருமணத்தை தடுக்கவே, தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.