தேனி:பிரம்மாகுமாரிகள் இயக்கம் தேனி கிளை நிலையம் சார்பில், பூதிப்புரம் வைரவர் கோயில் வளாகத்தில் உலக நாடக சக்கரத்தின் சரித்திரத்தை உணர்த்தும் ஆன்மிக கொலு கண்காட்சி நடந்தது. பொறுப்பாளர் விமலா பேசினார்.
நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்கள் பராசக்தி, லட்சுமி, சரஸ்வதி தேவிகளுக்கு பூஜை நடக்கிறது. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ரூபங்களில் அலங்காரம் செய்யப்படுகிறது. ஓய்வு டி.எஸ்.பி., நாராயணன், கோவிந்தார், வீரப்பன், வீராச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.