அலங்காநல்லூர் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தைலக்காப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2018 12:10
அலங்காநல்லூர்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தைலக்காப்பு திருவிழா அக்.,19 துவங்கி 21 வரை மூன்று நாட்களுக்கு நடக்கிறது.முக்கிய நிகழ்வாக அக்., 21 கள்ளழகர் சுந்தரராஜபெருமாள் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்ததொட்டியில் எழுந்தருள்கிறார். அன்று மதியம் 1:30 மணி முதல் 2:00 மணிக்குள் திருத்தைலம் சாத்தப்பட்டு நூபுரகங்கையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கும். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேக, ஆராதனைகளும் நடக்கும். பின் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் செல்லும் பெருமாள் மலையடிவார கோயில் செல்கிறார்.