பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
சென்னை: சபரிமலை சுற்றுலாதலம் அல்ல; கடவுள் நம்பிக்கை உள்ள ஐயப்ப பக்தர்கள் செல்லும் இடம் என, த.மா.கா., துணைத் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சபரிமலை விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை என, கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.சபரிமலைக்கு, பெண்கள் செல்வதற்கான வாய்ப்பை, உச்சநீதிமன்றம் ஏற்படுத்தி கொடுத்ததே தவிர, கோவில் வழிபாட்டு முறைகளுக்கு மாறாக போகலாம் என, கூறவில்லை. தீர்ப்பை அமல்படுத்த நாள் குறிக்கவும் இல்லை.சில நாட்களாக கோவிலுக்குசெல்வேன் என, சில பெண்கள் சென்றனர். குறிப்பாக, கவிதாவும், ரஹானா பாத்திமாவும் ஐயப்ப பக்தர்களா; கோவில் வழிபாட்டு விதிமுறைகளின்படி, விரதம் இருந்து வந்தார்களா.சபரிமலை சுற்றுலாதலம் அல்ல; கடவுள் நம்பிக்கை உள்ள ஐயப்ப பக்தர்கள் செல்லும் இடம்.முல்லை பெரியாறு அணையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், கேரள அரசு மாற்றம் செய்ய முனைந்தது. காவிரி நீர் பிரச்னையில், காலக்கெடு எதுவும், தீர்ப்பை நிறைவேற்ற நிர்ணயிக்காதபோது, கேரள அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி, போலீசார் பாதுகாப்போடு, இந்த பெண்களை, ராஜமரியாதையோடு அழைத்து சென்றது ஏன்?இவ்வாறு ஞானதேசிகன் கூறியுள்ளார்.