ஆடு, கோழி, மீன்கள் போன்றவை மட்டுமல்ல, நாம் உணவாக உட்கொள்ளும் தானியங்களுக்கும் உயிர் உள்ளது. அதனால்தான் அவை முளைக்கின்றன. அதனால், எல்லா உணவுகளும் ஒருவகையில் உயிர்க்கொலையால் விளைவதுதான்! ‘அப்படியானால் நாம் உண்ணவோ கூடாதா, உண்டால் அது பாவமா’ எனும் கேள்வி எழலாம். பகவான் கிருஷ்ணர் நமக்கு ஓர் உபாயம் சொல்லி உய்விக்கிறார். தயாரிக்கப்படும் உணவுகளை ஆண்டவனுக்கு அர்ப்பணித்தால், அது பிரசாதமாகிவிடுகிறது. பிறகு அதில் சிறிதளவு சிறிய ஜீவன்களுக்கு பங்களித்து உண்டால், எந்தத் தோஷமும் அண்டுவதில்லை. எதையும் ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லி ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்திடாது. -மூதறிஞர் ராஜாஜி