பதிவு செய்த நாள்
30
அக்
2018
12:10
கொடுமுடி: ஈரோடு மாவட்டம், கொடுமுடி, ஊஞ்சலூர் அருகே, கொளத்துப்பாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா, நேற்று (அக்., 29ல்) காலை நடந்தது. முன்னதாக கிராம சாந்தி, விநாயகர் வழிபாடு, காவேரி தீர்த்தம் எடுத்து வருதல், பூர்ணாகுதி, தீபாராதனையும், நவசக்தி அர்ச்சனை, வேதிகார்ச்சனை நடந்தது. இதை தொடர்ந்து, காலை, 9:10 மணிக்கு விநாயகர், பகவதி அம்மன், மதுரை வீரன், மகா முனி உள்ளிட்ட தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா சுந்தர குருக்கள் தலைமையில், ரவிச்சந்திர சிவம் சர்வ சாதகத்தில் நடந்தது.