தர்மபுரி: தகடூர் தமிழ் குழுமம் சார்பில், ஆன்மிக நூல் வெளியீட்டு விழா, தர்மபுரியில் நடந்தது. உதவும் உள்ளம் சேவை மைய நிறுவனர் மாணிக்கம் தலைமை வகித்து, இன்ஜினியர் நரசிம்மன் எழுதிய ஆன்மிக உலா என்ற புத்தகத்தை வெளியிட்டார். தகடூர் தமிழ் குழும தலைவர் ஜெயபிரகாசம், புத்தகத்தை அறிமுகம் செய்து பேசினார். எழுத்தாளர் கோபால் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இதில், மாதர் சங்க தலைவி சந்திரா ஆதிமூலம், முத்தமிழ் மன்ற தலைவர் மலர்வண்ணன், நூலகர் சரவணன், திரைப்பட பாடலாசிரியர் புதுயுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.