திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் குளம் திருப்பாற்கடலின் நீர் வரும் மடை10 ஆண்டுகளுக்கு பின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலுக்கு முன்பாக உள்ளது திருப்பாற்கடல். புனிதமான இக்கோயில் குளம் நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போனதால் கடந்த 10 ஆண்டுகளாக நீர்வரத்தின்றி குளம் வறண்டு காணப்பட்டது.
இது குறித்து கிராமத்தினர் பலமுறை கோரியும் நடவடிக்கை இல்லை.திருப்புத்தூர் தாசில்தார் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா முன்னிலையில் நேற்று (அக்.,31ல்) நீர்வரத்துக் கால்வாய் புனரமைக்கும் பணி நடந்தது.
10 ஆண்டுக்கும் மேலாகஆக்கிரமிக்கப்பட்டு தோட்டமாக மாறியிருந்த மடையைக் கண்டு பிடித்து ஆக்கிரமிப்பை அகற்றி நீர்வரத்துக்கால்வாய் தூர் வாரப்பட்டது. மழை பெய்தால் கோயில் தெப்பக்குளம் வற்றாமல் காட்சி அளிப்பது போல திருப்பாற்கடலும் இனி நிரம்பி வற்றாது இருக்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.