சபரிமலை சென்ற ஆசிரியைக்கு சரண கோஷம் முழங்கி எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2018 12:11
திருவனந்தபுரம் :சபரிமலை செல்ல முயன்ற ஆசிரியைக்கு வகுப்பறையில் சரண கோஷம் முழங்கி மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.ஐப்பசி மாத பூஜையின் போது 15 பெண்கள் சபரிமலை சென்று எதிர்ப்பால் திரும்பினர். இவர்களில் ஒருவரான டி.வி. பிந்து கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்ததால் இவர் அகளி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.முதல் நாள் வகுப்புக்கு சென்ற இவரை மாணவர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி முதல்வரிடம் பிந்து புகார் செய்தார். அவர் மாணவர்களை அழைத்து பேசி பிரச்னையை முடித்து வைத்தார்.