பதிவு செய்த நாள்
02
நவ
2018
12:11
சேலம்: சபரிமலை பக்தர்களின் வசதிக்கு, சேலம் வழியே இயக்கப்படும் ரயில்களின் விபரம்: கொல்லம் - சென்னை சுவிதா சிறப்பு ரயில், நவ., 18, 25, டிச., 2, 9, 30 மாலை, 3:00 மணிக்கு,
கொல்லத்திலிருந்து கிளம்பி, அடுத்தநாள் காலை, 7:20க்கு சென்னையை அடையும்.
அதேபோல், நவ., 16, 23, 30, டிச., 7, 21, 28 இரவு, 8:40க்கு, சென்னையிலிருந்து புறப்பட்டு, சேலம் வழியே, அடுத்தநாள் மதியம், 12:00 மணிக்கு, கொல்லத்தை அடையும். கொல்லம் - சென்னை ரயில், நவ., 20, 22, 27, 29 மாலை, 3:00 மணிக்கு கொல்லத்திலிருந்து கிளம்பி, மறுநாள் காலை, 9:45 மணிக்கு சென்னையை அடையும். டிச., 16, 23 மாலை, 3:00 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை, 7:20க்கு சென்னையை அடையும். சென்னை - கொல்லம் ரயில், நவ., 19, 21, 26, 28 இரவு, 8:40 மணிக்கு, சென்னையிலிருந்து கிளம்பி, சேலம் வழியே, அடுத்தநாள் மதியம், 12:00 மணிக்கு, கொல்லத்தை அடையும். இந்த ரயில்களின் முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு தொடங்குகிறது.