மேற்கு வங்காளத்தில் விஜயன் என்ற அசுரனை காளி வதம் செய்ததாகவும், கோபம் நிறைந்த காளியின் உக்ரத்தை சங்கரன் தணித்த நாளாகவும் கருதப்பட்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது. சதுர்தசி இரவில் மாவிலைத் தோரணங்கள் கட்டி 14 தீபங்கள் ஏற்றி, இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணி வரை நான்கு முறை பூஜை செய்யப்படுகிறது. ‘பாய்புட்கோ ’ என்ற பெயரில் பெண்கள் சகோதரர் நலம் வேண்டி சந்தனப் பொட்டிட்டு புத்தாடை, பரிசுகள் கொடுத்து, இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.