தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள் தமிழகத்தில் சோழர் காலம் வரை தீபாவளி கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது! ஸ்ரீதேவி மற்றும் மூதேவி ஆகியோர் பாற்கடலில் தோன்றியதும் அவர்களை முறையே மகாவிஷ்ணுவும், உத்தாலக முனிவரும் மணந்தது தீபாவளியில் என்பர். அதேபோல், வாமன அவதாரம் எடுத்து வந்த மகாவிஷ்ணு, மகா பலியிடம் மூன்றடி நிலம் தானம் பெற்று... மூவுலகையும் அளந்து... அவனது கர்வத்தை அடக்கிய திருநாள் தீபாவளி என்றும் சொல்வர். காஷ்மீர் மக்கள் தீபாவளியன்று ‘கோ பூஜை ’ செய்கின்றனர். குஜராத் மாநிலத்தில் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாரணாசியில், ‘கார்த்திகை பூர்ணிமா ’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளிலேயே ஆதிசங்கரர் தனது ஞான பீடத்தை ஏற்படுத்தினாராம். புத்தபிரான் முக்தி அடைந்த நாளாக பவுத்தர்களும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளித் திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.