தீபாவளி தினத்தன்று விசேஷ பூஜை ஆராதனைகள் நடைபெறுவதற்காக கோயில்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்ட தகவலைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் பல உள்ளன. குடந்தை சாரங்கபாணி கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு. தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கிறது. காளஹஸ்தி கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றில், தீபாவளித் திருநாளில் இறைவனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற மானியம் வழங்கப்பட்டதாகச் செய்திகள் காணப்படுகின்றன.