வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகையை நான்கு நாள்கள் கொண்டாடுவார்கள். முதல் நாளான சதுர்த்தசி, நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள். இரண்டாம் நாளான அமாவாசை தினத்தன்று லட்சுமி பூஜை செய்வார்கள். அன்று லட்சுமிதேவி பக்தர்களின் இல்லம் தேடி வந்து, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவாள் என்பது ஐதீகம். மூன்றாவது நாள் சுத்த பாட்டிமையாகும். இதைப் ‘பலி பாட்டிமை ’ என்றும் சொல்வர். இது, மகாவிஷ்ணுவின் திருவருளால் பலிச் சக்ரவர்த்தி பாதாள லோகத்திலிருந்து வெளிப்பட்டு, பூலோகத்தை ஆளத் தொடங்கிய நாளாகும். நான்காவது நாள் ‘யம துவிதியை ’ எனப்படும். அன்று பெண்கள் தங்கள் சகோதரர்களை தமது வீட்டுக்கு அழைத்து உபசரிப்பார்கள்.