தீப ஒளியே தீபாவளி, என்பர். தீப ஒளி இருளை அகற்றி வெளிச்சத்தைத் தருவதைப் போல் நம்மிடையே உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி மனதில் ஞான ஒளியை ஏற்றுவதன் மூலம் விரட்டியடிக்க வேண்டும். தீப ஒளி பிறருக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டுவது போல் நாமும் பிறருக்குப் பயன்பட வேண்டும், என்பதை தீபாவளி உணர்த்துகின்றது. பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தித்திப்புப் பண்டங்கள் தந்து உபசரித்து மகிழ்ச்சியாக இருப்பது போல் எப்போதும் சந்தோஷமாக மனதை வைத்து கொள்ளப் பழகிக் கொண்டால் வாழ்வில் நிம்மதி ஏற்படும் என்பதையும் தீபாவளி உணர்த்துகிறது.