பஞ்சாப் மாநிலத்தில், சீதையை சிறைப்படுத்திய ராவணனை அழித்து, ராமர் அயோதிக்கு வெற்றியுடன் திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மாலையில் பூஜை நடைபெறும். லட்சுமிதேவி படத்தின் முன் உலர்ந்த பழங்கள், வீட்டில் பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் நகைகள், பாத்திரங்கள் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றுவார்கள். படம் இருக்கும் அறையில் இரவு முழுவதும் ஒரு விளக்கு எரிய விடப்படும். இந்த ஒளியைக் கண்டு லட்சுமிதேவி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை.