தந்தை நரகாசுரன் இறந்த நாளை முதல் முதலில் கொண்டாடியவர் மகன் பகதத்தன் தான். கிருஷ்ணருக்கும், நரகாசுரனுக்கும் நடந்த யுத்தம் பகலில் துவங்கி நள்ளிரவில் முடிந்தது. நரகாசுரனின் வதம் சூரியன் உதயமாவதற்கு சில நாழிகைக்கு முன்னால் நடந்தது. எனவே தான் சூரியன் உதயமாவதற்கு முன் கங்க ஸ்நானம் செய்து, பட்டாசு வெடித்தார்கள். தீபாவளி கூறும் தத்துவம், எத்தனை வரங்கள் பெற்று பலசாலியாக இருந்தாலும், அராஜக வழியில் சென்றால் பெற்ற மகனாக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்பதே.