பதிவு செய்த நாள்
09
நவ
2018
02:11
ப.வேலூர்: கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் வரும், 13ல் நடைபெறவுள்ளது. தொடக்க நாளான நேற்று (நவம்., 8ல்), ப.வேலூர் சுல்தான் பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று நவம்., 8ல் முதல் வரும், 13 வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளதால், பாலமுருகனுக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது.
சூரசம்ஹார தினமான வரும், 13ல், மதியம், 12:00 மணியளவில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, அன்று மாலை, 5:00 மணியளவில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் சஷ்டி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.