பதிவு செய்த நாள்
09
நவ
2018
02:11
தர்மபுரி: கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில், நேற்று (நவம்., 8ல்)துவங்கியது. வரும், 14 வரை விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, நாள்தோறும், சுவாமிக்கு லட்சார்ச்சனையும், அபிஷேக ஆராதனையும், திருமுறை பாராயண வழிபாடும் நடக்கிறது. வரும், 13, இரவு, 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
அலங்கரிக்கப்பட்ட சுவர்ண மண்டப ரதத்தில், முக்கிய வீதிகளின் வழியாக சுப்பிரமணிய சுவாமி மற்றும் சூரபத்மன் ஊர்வலம் நடக்கிறது. பின், பைபாஸ் ரோட்டில் உள்ள சுவாமி மண்டபத்தில், சூரபத்மனை, முருகபெருமான் வதம் செய்யும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 14ல், காலை, 10:00 மணிக்கு பூர்த்தி ஹோமமும், பகல், 1:00 மணிக்கு, இடும்பன் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷ அலங்காரம் நடக்கிறது. அன்றிரவு, 7:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணமும், பொன்மயில் வாகனத்தில், வீதி உலாவும் நடக்கிறது.