Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 41. நாகராஜ பூஜை
நாகராஜ பூஜை (சுக்ல ஷஷ்டி விரதம்)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
18:36

காலம்: ஏதாவது ஒரு மாதத்தில், சுக்லபக்ஷ ஷஷ்டி திதியன்று விரதம் ஏற்று, நாகராஜ பூஜையைச் செய்யவேண்டும். முற்பிறவியில் செய்த ஸர்ப்ப ஹத்யாதி தோஷங்கள் நீங்கி, ஸந்ததி ஏற்படுவதற்காக இந்த விரதத்தையும் நாகராஜ பூஜையையும் பெண்கள் அனுஷ்டிப்பார்கள்.

கச்யப முனிவர்  கத்ருவின் புதல்வர்கள் ஆதிசேஷன், வாசுகி, தக்ஷகன், குளிகன், சங்கன், கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள். பாற்கடலில் மத்தாக மந்தர மலையைக் கட்டி இழுத்து வந்து போட்டவர் மகா விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷன். கயிறாக இருந்து கடைந்தவர் வாசுகி. நைமிசாரண்யத்தில் கோமதி நதிக் கரையில் இருந்த நாகசுணை என்ற பொய்கையே பத்மனின் வாசஸ்தலம். சூர்யாந்தர்யாமி என்ற மந்திர வித்தையை தர்மாரண்யன் என்ற அந்தணனுக்கு போதித்தவன் இவன். வட திசைக் காவலாளியாக மகாபத்மனை சிவபெருமான் நியமித்தார். சிவனது வலது கையில் குளிகனும், இடது கையில் ஆதிசேஷனும் கங்கணமாகச் சுற்றியிருக்கின்றனர். கறுப்பான கார்க்கோடகன் சிவசங்கரனின் மோதிரம். நளனைத் தீண்டி வரமளித்தவனும் இவனே! பரீட்சித்து மகாராஜாவைக் கடித்த தக்ஷகன் மஞ்சள் நிறம். வாசுகியும், பத்மனும் சிவப்பு. சங்கன் வெண்மை. சிவனது முடியில் வீற்றிருப்பவன் சங்கபாலன்.

(பிரம்மாவின் கழன்று விழுந்த கேசங்களே சர்ப்பங்களாயின என்று விஷ்ணு புராணம் சொல்கிறது.) பூமியைத் தாங்குபவன் ஆதிசேஷன்.  இப்பேற்பட்ட நாகங்கள் பிறந்த தினம்தான் நாக சதுர்த்தி. அன்று கோயில் சென்று நாகங்களை வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்குவதோடு விஷ அபாயமும் ஏற்படாது. திருமணம் கைகூடும். சந்தான பாக்கியம் கிட்டும். நாகங்கள் ஜனமேஜயன் செய்த சர்ப்பயாகத்திலிருந்து மீண்ட நாளும் இந்த சதுர்த்தியே! சுக்ல ஸஷ்டியிலும், நாக சதுர்த்தியிலும் இப்பூஜையை செய்து வாழ்வாங்கு வாழலாம்.

பலன்: ‘நாகதோஷம்’ இருப்பவர்கள் இந்ததோஷம் நீங்க இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் இந்த பூஜையை செய்ய வேண்டும்.

குறிப்பு:

1. ‘நாக புஷ்பத்தால்’  அர்ச்சிப்பது விசேஷமானது.
2. காய்ச்சாத பால் நைவேத்தியம் செய்வது உத்தமம்.

சுக்ல ஷஷ்டி விரதம்

(நாகராஜ பூஜை)

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல் பக்கம் 6ம் முதல் 7 வரை பார்க்கவும்.

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. நாகர் பிரதிமையையோ அல்லது நாகராஜரை கலசத்தில் ஆவாஹித்து, அலங்கரித்து வைக்கவும்.

3. நைவேத்ய பொருட்கள்: சாதம், சர்க்கரைப் பொங்கல், பாயஸம், வடை, நெய், அப்பம், பால், இட்லி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு.

4. ‘நாக புஷ்பத்தால் ’  அர்ச்சிப்பது விசேஷமானது.

1. பூர்வாங்க பூஜைகள்

முதலில் பக்கம் 10 பக்கம் முதல் பக்கம் 14ம் பக்கம் வரை உள்ள (தீபம் + ஆசமனம் + குரு த்யானம் +கணபதி  தியானம் + ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ஆஸன பூஜை + ஆத்ம பூஜை) பூர்வாங்க பூஜைகளைச் செய்யவும்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. ஸ்ரீ. விக்னேச்வர பூஜை
(மஞ்சள் பிள்ளையார்)

ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் இந்த விக்னேச்வர பூஜையை செய்ய வேண்டும் (பக்கம் 29ம் முதல் பக்கம் 39 வரை)

(தியானம் + ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை + நமஸ்காரம்)

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண, த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’ திதமே கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்புத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணேபார்ச்’வே ச’காப்தே, அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா ஸம்வத்ஸராணாம் மத்யே *...நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே/ தக்ஷிணாயனே, *.....ருதௌ, *......மாஸே, சு’க்லபக்ஷே, ஷஷ்ட்யாம், சு’பதிதௌ, *....வாஸரயுக்தாயாம், *.... நக்ஷத்ரயுக்தாயாம், சு’பயோக சு’பகரண, ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம், ஷஷ்ட்யாம் சு’பதிதௌ.

மம இஹ ஜன்மனி ஜன்மாந்தரே ச குருத்வேஷண, பாலதாடன, பாலதர்ஜன, கோவத்ஸ வியோஜன, பர்ஹ்ருத் க்லேச ’கரண, ப்ராண்யண்ட பேதன, பரஸுத வித்வேஷண, ம்ருக சாபஹனன, கர்ப்பத்வம்ஸாதிபி: ஸம்பாவிதானாம் சதுர்வித வந்த்யாத்வ ஹேதுபூதானாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபநோதநார்த்தம், சீ’க்ரமேவ ஜீவத் ஸுரூப ஸுகுணானேக பத்ராவர்த்யர்த்தம், அஸ்மின் சு’க்ல ஷஷ்டி புண்யகாலே நாகராஜ பூஜாம் கரிஷ்யே/ ததங்கம் கலச ’ பூஜாம் கரிஷ்யே//

விக்னேச்’வர உத்யாபனம் (யதாஸ்தானம்)

“விக்னேச்’வரம் யுதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

தியானம்

ஏஹி ஸர்ப்ப மஹாபாக பிம்பேஸ்மின் ஸந்நிதிம் குரு/
பூஜார்த்தம் த்வாமஹம் பக்த்யா ப்ரார்த்தயாமி ஸமாஹித://
அஸ்மின் பிம்பே நாகராஜம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஆவாஹனம்

ஆவாஹயாமி ஸர்ப்பேச’ம் த்விபுஜம் பீதவாஸஸம்/
பணா பஞ்சக ஸம்யுக்தம் ஸர்வாபரண பூஷிதம்//
நாகராஜம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

ஆதிசே’ஷ நமஸ்துப்யம் நாகராஜ நமோஸ்து தே/
காத்ரவேய கணஸ்வாமின் க்ருஹாண கனகாஸனம்//
ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

பன்னகான மதிபதே பாதாள புவனஸ்த்தித/
பாத்யம் க்ருஹாண பரம புத்ரஸௌபாக்ய தாயாக//
பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அஹிராஜ நமஸ்துப்யம் அவநீதரண க்ஷம/
அர்க்யம் க்ருஹாண பகவன் அபீப்ஸித பலப்ரத//
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆதிசே’ஷ நமஸ்துப்யம் ஆதிமத்ய விவர்ஜித/
ஆச்’ரிதார்த்தி ப்ரதானந்த க்ருஹாணாசமனீயகம்//
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

மஹாநாக நமஸ்துப்யம் மதுவைரி மஹாஸன/
மதுபர்க்கம் க்ருஹாணேதம் மஹ்யம் தேஹி
மஹாவரான்//
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் பணிராஜ நமோஸ்துதே/
பந்நகேச’ நமஸ்துப்யம் பஞ்சபாதக நாச’ன//
பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருத தெளிக்கவும்)

கங்காஜலமிதம் திவ்யம் காங்கேய கலச’ஸித்திதம்/
ஸ்நாநார்த்தம் க்ருஹ்யதாம் தேவ ஸர்ப்பராஜ
நமோஸ்துதே//
சு’த்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வஸுதா தாரிணே துப்யம் வரதாய நமோ நம:/
வஸ்த்ரத்வயம் க்ருஹாணேதம் வரான் தேஹி
ஸுதான் ப்ரபோ//
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

உரகேச ’ க்ருஹாணேதம் உபவீதம் மயார்ப்பிதம்/
உர்வீதர நமஸ்துப்யம் உத்தமான் தேஹி மே
ஸுதான் ப்ரபோ:// உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

கந்தம் க்ருஹாண பகவன் அந்தகாரி விபூஷண/
சதுர்விதம் மமா ஹீச’ வந்த்யாத்வம் விநிவாரய//
கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

அக்ஷதான் தவளான் திவ்யான் ஆசீ’விஷ குலாதிப/
பந்நகேச ’ க்ருஹாணேமான் பக்த்யா தத்தான் மயா ப்ரபோ//
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

மாலதீ குந்த மந்தார பங்கஜ ப்ரமுகானி ச/
குஸுமானி க்ருஹாணேச’ குரு மே வரமீப்ஸிதம்//
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை

(ஒவ்வொரு நாமாவையும் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்)

பன்னகேசா’ய        நம: பாதௌ        பூஜயாமி (கால்)
நாகாதிபாய        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஜகத்தராய        நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
உரகாய        நம: ஊரு        பூஜயாமி (தொடை)
காத்ரவேயாய        நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
நாகாய        நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
வாஸுகயே        நம: வக்ஷஸ்தலம்        பூஜயாமி (மார்பு)
கத்ரூஸுதாய        நம: கண்ட்டம்        பூஜயாமி (கழுத்து)
வ்ரதாய        நம: வதனம்        பூஜயாமி (உதடு)
சக்ஷகிச்’ரவஸே        நம: ச்’ரோத்ராணி        பூஜயாமி (காதுகள்)
நேத்ரே        நம: நேத்ராணி        பூஜயாமி (கண்கள்)
பணி ராஜாய        நம: பாலம்        பூஜயாமி (நெற்றி)
ஸஹஸ்ர சி’ரஸே        நம: சி’ராம்ஸி        பூஜயாமி (தலை)
ஸர்ப்பராஜாய        நம: ஸர்வாண்யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

நாகராஜ அஷ்டோத்தர ச’த நாமாவளி:

(புஷ்பம் அக்ஷதையால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் அனந்தாய        நம:
ஓம் வாஸுதேவாக்யாய    நம:
ஓம் தக்ஷகாய        நம:
ஓம் விச்’வதோமுகாய    நம:
ஓம் கார்கோடகாய    நம:
ஓம் மஹாபத்மாய    நம:
ஓம் பத்மாய        நம:
ஓம் ச ’ங்காய        நம:
ஓம் சி’வப்ரியாய        நம:
ஓம் த்ருதராஷ்ட்ராய (10)    நம:
ஓம் ச’ங்கபாலாய        நம:
ஓம் குளிகாய        நம:
ஓம் ஸர்ப்பநாயகாய    நம:
ஓம் இஷ்டதாயிநே    நம:
ஓம் நாகராஜாய        நம:
ஓம் புராணாய        நம:
ஓம் புருஷாய        நம:
ஓம் அநகாய        நம:
ஓம் விச்’வரூபாய        நம:
ஓம் மஹீதாரிணே (20)    நம:
ஓம் காமதாயினே        நம:
ஓம் ஸுரார்சிதாய    நம:
ஓம் குந்தப்ரபாய        நம:
ஓம் பஹுசி’ரஸே        நம:
ஓம் தக்ஷாய        நம:
ஓம் தாமோதராய        நம:
ஓம் அக்ஷராய        நம:
ஓம் கணாதிபாய        நம:
ஓம் மஹாஸேனாய    நம:
ஓம் புண்யமூர்த்தயே (30)    நம:
ஓம் கணப்ரியாய        நம:
ஓம் வரப்ரதாய        நம:
ஓம் வாயு பக்ஷாய    நம:
ஓம் விச்’வதாரிணே    நம:
ஓம் விஹங்கமாய        நம:
ஓம் புத்ரப்ரதாய        நம:
ஓம் புண்யரூபாய        நம:
ஓம் பந்நகேசா’ய        நம:
ஓம் பிலேசா’ய        நம:
ஓம் பரமேஷ்டினே (40)    நம:
ஓம் பசு’பதயே        நம:
ஓம் பவநாசி’னே        நம:
ஓம் பலப்ரதாய        நம:
ஓம் தாமோதராய        நம:
ஓம் தைத்யஹந்த்ரே    நம:
ஓம் தயாரூபாய        நம:
ஓம் தனப்ரதாய        நம:
ஓம் மதிதாயினே        நம:
ஓம் மஹாமாயினே    நம:
ஓம் மதுவைரிணே (50)    நம:
ஓம் மஹோரகாய        நம:
ஓம் புஜகேசா’ய        நம:
ஓம் பீமரூபாய        நம:
ஓம் பீமகாயாய        நம:
ஓம் பயாபஹ்ருதே    நம:
ஓம் சு’க்லரூபாய        நம:
ஓம் சு’த்த தேஹாய    நம:
ஓம் சோ’கஹாரிணே    நம:
ஓம் சு’பப்ரதாய        நம:
ஓம் ஸந்தானதாயினே (60)    நம:
ஓம் ஸர்ப்பேசா’ய        நம:
ஓம் ஸர்வதாயினே    நம:
ஓம் ஸரீஸ்ரூபாய        நம:
ஓம் லக்ஷ்மீகராய        நம:
ஓம் லாபதாயினே        நம:
ஓம் லலிதாய        நம:
ஓம் லக்ஷ்மணாக்ருதயே    நம:
ஓம் தயாராச ’யே        நம:
ஓம் தசா’ரதயே        நம:
ஓம் தைத்யஹந்த்ரே (70)    நம:
ஓம் தமாச்’ரயாய        நம:
ஓம் ரம்யரூபாய        நம:
ஓம் ராமபக்தாய        நம:
ஓம் ரணதீராய        நம:
ஓம் ரதிப்ரதாய        நம:
ஓம் ஸௌமித்ரயே    நம:
ஓம் ஸோமஸங்காசா’ய    நம:
ஓம் ஸர்ப்பராஜாய    நம:
ஓம் ஸதாம் ப்ரியாய     நம:
ஓம் கர்புராய (80)    நம:
ஓம் காம்ய பலதாய     நம:
ஓம் கிரீடினே         நம:
ஓம் கின்னரார்ச்சிதாய    நம:
ஓம் பாதாள வாஸினே    நம:
ஓம் பராய        நம:
ஓம் பணாமண்டல மண்டிதாய    நம:
ஓம் பாஹுலேயாய    நம:
ஓம் பக்தநிதயே        நம:
ஓம் பூமிதாரிணே (90)    நம:
ஓம் பவப்ரியாய        நம:
ஓம் நாராயணாய        நம:
ஓம் நாகராஜாய        நம:
ஓம் நாநாரூபாய        நம:
ஓம் நதப்ரியாய        நம:
ஓம் காகோதராய        நம:
ஓம் காம்யரூபாய        நம:
ஓம் கல்யாணாய        நம:
ஓம் காமிதார்த்த தாயினே    நம:
ஓம் ஹதாஸுராய (100)     நம:
ஓம் ஹல்யஹீனாய    நம:
ஓம் ஹர்ஷதாய        நம:
ஓம் ஹரபூஷணாய    நம:
ஓம் ஜகதாதயே        நம:
ஓம் ஜராஹீனாய        நம:
ஓம் ஜாதிசூ’ன்யாய    நம:
ஓம் ஜகந்மயாய        நம:
ஓம் வந்த்யாத்வதோஷ ச ’மநாய    நம:
ஓம் புத்ரபௌத்ர பலப்ரதாய    நம:
ஓம் நாகராஜாய (110)    நம:

நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

தூபம் க்ருஹாண நாகேச ’ தூதபாப நமோஸ்துதே/
குக்குல்வாதி ஸமாயுக்தம் கோவிந்தச’யந் ப்ரபோ//
தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் தீபம் பச்’ய தயாநிதே/
ஸர்ப்பராஜ நமஸ்துப்யம் ஸர்வபாபம் நிவாரய//
தீபம் தர்ச’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தேவஸவித: ப்ரஸுவ (ஸத்யம் த்வர்த்தேன) பரிஷிஞ்சாமி (காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ / (ருதம் த்வா)
ஸத்யேன பரிஷிஞ்சாமி/ (மாலையில் பூஜை செய்தால்)

பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

நானாபக்ஷ்ய ஸமோபேதம் நாகலோகாதிப ப்ரபோ/
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ நாளிகேராதி ஸம்யுதம்//

(கீழே குழிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)

நாகராஜாய நம: சா’ல்யந்நம், க்ருதகுள பாயஸம்,
மாஷாபூபம், குளாபூபம், லட்டுகம், நாரிகேள கண்டம்,
கதலீபலம், கோ க்ஷீரம், ஸர்வம் அம்ருதம் மஹா நைவேத்யம்
நிவேதயாமி

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பூகீபலம் ஸகர்ப்பூரம் நாகவல்லீ தளாநி ச/
சூர்ணம் ச சந்த்ர ஸத்ருச’ம் க்ருஹ்யதாம் பணிநாயக://
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை தெளித்து நைவேத்யம் செய்யவும்.)

நீராஜனமிதம் தேவ கர்ப்பூரை: கலிதம் மயா/
ஸஹஸ்ரசீ’ர்ஷ ஸர்ப்பேச’ ஸ்வீகுருஷ்வ தயாநிதே//
கர்ப்பூர நீராஜனம் தர்ச’யாமி
(கற்பூரம் காட்டவும்)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச/
தானி தானி விநச்’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே//

ப்ரக்ருஷ்ட பாபநாசா’ய ப்ரக்ருஷ்ட பலஸித்தயே/
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரஸீத சி’வபூஷண//

நமஸ்கரோமி தேவேச ’ நாகேந்த்ர ஹரபூஷண/
அபீஷ்ட தாயினே துப்யம் அஹிராஜ நமோஸ்து தே//
நாகராஜாய நம: அனந்தகோடி ப்ரதக்ஷிண
நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்.)

நாகேச ’ புத்ரஸௌபாக்யம் தேஹி மே வம்ச ’வ்ருத்தயே/
நாகரூபதாரானந்த நானாபீஷ்ட பலப்ரத//
(ப்ராத்தனை செய்து கொள்ளவும்.)

அர்க்ய ப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

அத்ய பூர்வோக்த ஏவங்குண விசே’ஷண
விசி’ஷ்டாயாம் அஸ்யாம் ஷஷ்ட்யாம் சு’பதிதௌ
நாகராஜ பூஜாந்தே க்ஷீரார்க்ய தானம் உபாயன தானம்
ச கரிஷ்யே//

(பிறகு கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லி புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக் கொண்டு, பாலால் அர்க்யம் விடவும்.)

நாகராஜ நமஸ்துப்யம் புத்ரஸௌபாக்ய தாயக/
அர்க்யம் க்ருஹாண பகவன் அபீஷ்ட பலஸித்தயே///

நாகராஜாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.
அனேன அர்க்யப்ரதானேன பகவான் ஸர்வதேவாத்மக:
நாகராஜ: ப்ரீயதாம்.

உபாயன தானம்

(பூஜை, செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)

நாகராஜஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்.
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்.

ஸர்பேச ’: ப்ரதிக்ருஹ்ணாதி ஸர்ப்பேசோ’வை ததாதி ச/
ஸர்பேச ’: ஸ்தாரகோ த்வாப்யாம் ஸர்ப்பேசா’ய நமோ நம://

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம் ஸர்ப்பராஜ ப்ரீதம்
காமயமான: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம//

என்று சொல்லி, தாம்பூலம், பழம், தேங்காய், தக்ஷிணை இவைகளை ஸமர்ப்பித்து, நமஸ்காரம் செய்யவும்.

(பிறகு, நிவேதனம் செய்த பாலையும், சங்க தீர்த்தத்தையும் கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லிச் சாப்பிட வேண்டும்.)

ச’ங்க்ஸ்த்திதமிதம் க்ஷீரம் துப்யம் தேவ நிவேதிதம்/
பிபாமி க்ருபயா தேஹி ஸந்ததிம் தே பணீச்’வர//

புனர்பூஜை/ யதாஸ்த்தானம்

பிறகு, அன்று மாலை அஷ்டோத்திரம் ஜபித்து தூப, தீபம் காட்டி, பழம், பால் நைவேத்யம் செய்து, “ஸ்ரீநாகராஜம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று சொல்லி புஷ்பம் அக்ஷதையை ஸ்வாமியிடம் சேர்த்து வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.

குறிப்பு: 1. பூஜை செய்த பாம்பு புற்றிலிருந்து ஒரு துளி புற்று மண் எடுத்து சகோதரர்களுக்கு முதுகில் இட வேண்டும். இது ஒரு வகை ரக்ஷை ஆகும்.

2. வீட்டு வாசலில் இருபக்கமும் குழைத்த மஞ்சளினால் நாகம் போல் படத்தில் உள்ளபடி வரைய வேண்டும் இது வீட்டிற்கு ரக்ஷையாக அமையும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar