பதிவு செய்த நாள்
10
நவ
2018
02:11
குளித்தலை: காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல் பெற்ற முதல் சிவத் தலம், குளித்தலை அடுத்துள்ள அய்யர்மலையில் உள்ள சுரும்பார்குழலி உடனுறை ரெத்தின கிரீஸ்வரர் கோவில் ஆகும். இங்கு, 45 ஆண்டுகளுக்கு முன், சூரசம்ஹார விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு சூரசம்ஹார விழா, கடந்த, 4ல் துவங்கியது.
விழாவை முன்னிட்டு, மலையில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, தினமும் சிறப்பு அபிஷேகம் பூஜை நடக்கிறது. வரும், 13 மாலை, 4:00 மணிக்கு, சுவாமி புறப்பாடு, அதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் அன்னையிடம் சக்திவேல் வாங்கும் நிகச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்குமேல், சூரசம்ஹார விழா நடக்கிறது. 45 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இவ்விழாவிற்கு வேண்டிய ஏற்பாடுகளை, அய்யர்மலை சூர சம்ஹார விழா அறக்கட்டளை செய்து வருகிறது.