தேவகோட்டை:தேவகோட்டையில் 73ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. செட்டிநாடு குழுமத் தலைவர் முத்தையா துவக்கி வைத்தார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசியதாவது: பரப்பரப்பான உலகில் வாழ்கிறோம்.அன்பை வளர்க்கும் பணிகள் சமூகத்திற்கு தேவை. சிவபெருமான் தன் சக்தியின் ஒரு பாகத்தை முருகனாக படைக்கிறார். முருகனுக்கு ஞான சக்தியை தருகிறார். யாரெல்லாம் நாடி வருகிறார்களோ அவர்களது துன்பத்தை நீக்குகிறார் முருகன். அன்புதான் இன்ப ஊற்றின் அடையாளம். நம் வாழ்க்கைக்கு பொருள் தேவை. அது போல நாம் வாழ்வதிலும் பொருள் தேவை. ஒருவரை போல் மற்றவர் செய்வது ஒருபோதும் வெற்றி பெறாது. தீயவர்களை அழிப்பதல்ல அறம்; நல்லவர்களாக மாற்றுவது தான் அறம், என்றார்.விழா செயலாளர்கள் அருணாசலம், வெங்கடாசலம் மற்றும் சொக்கலிங்கம் பங்கேற்றனர்.