பதிவு செய்த நாள்
13
பிப்
2012
10:02
ஈரோடு: கோபி, காசிபாளையம் சித்திவிநாயகர், பால முருகன், மாரியம்மன், பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.ஃபிப்., 10ம் தேதி, காலை 6 மணிக்கு, கணபதி ஹோமம், நவநாயகர் ஹோமம், 7 மணிக்கு பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல் நடந்தது. நேற்று முன்தினம், காலை 8.45க்கு யாகசாலை பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மூர்த்தி ஹோமம், திரவிய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு சித்தி விநாயகர், மாரியம்மனுக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை, யாத்ரா தானம் நடந்தது. காலை 6.45க்கு சித்தி விநாயகர், பால முருகனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 7.15க்கு மாரியம்மன், பட்டாளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.தசதானம், தசதரிசனம், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் தடப்பள்ளி, காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.