பதிவு செய்த நாள்
13
பிப்
2012
10:02
சிவகிரி : வாசுதேவநல்லூர் புதிய குபேர ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. வாசுதேவநல்லூர் மேற்கே ராப்பக்கண்மாய் அருகில் மங்கள விநாயகர், சீதாதேவி சமேத கல்யாணராம லட்சுமணர், குபேர ஆஞ்சநேயர் சுவாமி போன்ற புதிய சிலைகள் உருவாக்கப்பட்டு புதிதாக கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் யாகசாலை பூஜையான அனுக்ஞை, சங்கல்பம், மகா கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கரணம், கங்கணதாரணம், தீர்த்த சம்மேளனம், வேதிகார்ச்சனை, வேதிகை பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாத்துதல், சிறப்பு சாந்தி நிகழ்ச்சி ஆகியன நடந்தது. இரண்டாம் நாள் அதிகாலை 4 மணிக்கு பிம்பசுத்தி, ரக்ஸாந்தனம், வேதிகார்ச்சனை, வேதழகாபூஜை, ஹோமம், ஸ்பர்ஸாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, கடம்புறப்பாடு, அதனை தொடர்ந்து குபேர ஆஞ்சநேயர் சிலை புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.