திருக்கோவிலூர்:திருக்கோவிலூர்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழாவிற்காக புதிதாக சூரபத்மன் வாகனம் செய்யப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர்‚ அந்தகா சூரனை வதம் செய்த வரலாற்று திருத்தலம். இத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும்‚ இந்த ஆண்டும் மூலவராக வீற்றிருக்கும் வள்ளி தேவசேனா சமேத சப்ரமணியர்க்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது.விழாவின் நிறைவாக இன்று 13 ல் மாலை நடைபெறும் சூரசம்ஹார விழாவிற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சூரபத்மன் வாகனம் செய்யப் பட்டுள்ளது. பக்தர்களின் உதவியுடன் செய்யப்பட்டுள்ள இந்த வாகனத்தின் பண்முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்யும் வைபவம் இன்று மாலை வீட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை‚ பக்தர்கள்‚ சிவாச்சாரியர்கள் செய்து வருகின்றனர்.