பதிவு செய்த நாள்
13
நவ
2018
12:11
சென்னை: கந்தசஷ்டி பெருவிழாவின் பிரதான நாளான இன்று, (நவம்., 13ல்) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதை ஒட்டி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோவில் களில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகன், சூரனை அழித்த பெருமையை, கந்த சஷ்டி விழாவாக, ஹிந்துக்கள் கொண்டாடுவர். ஐப்பசி மாதம், சுக்கிலபட்ச பிரதமை முதல் ஆறு நாட்கள், கந்த சஷ்டி காலம். இந்த ஆறு நாட்களும், விரத நாட்களாக கருதப்படுகிறது.கந்த சஷ்டியின் பிரதான நாளான இன்று, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதை ஒட்டி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள கோவில்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மாடம்பாக் கம் தேனுபுரீஸ்வர் கோவில், சென்னை வடபழனி, கந்தக்கோட்டம், பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன் கோவில்களில், இன்று (நவம்., 13ல்) இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். குன்றத்தூர், திருப்போரூர், வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோவில்களில், இன்று (நவம்., 13ல்) காலை முதல் பால்குடம் எடுத்தல், சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நடைபெறும். கோவில் நிர்வாகங்கள் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.