Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கார்த்திகை தீப ... கந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் சூரசம்ஹரம் கந்தசஷ்டி திருவிழா: மருதமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2018
10:11

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழா, லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், நேற்று கோலாகலமாக நடந்தது.

Default Image
Next News

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, 8ம் தேதி, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரங்களில், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.சஷ்டி விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நேற்று மாலை நடந்தது. அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.மதியம், 2:00 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. 2:30 மணிக்கு சிவன் கோவிலில்இருந்து, சூரபத்மன், படை, பரிவாரங்களோடு, கடற்கரைக்கு வந்து சேர்ந்தான்.மாலை, 4:40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து, கடற்கரைக்கு வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க, முதலில் கஜமுகசூரன், சுவாமியுடன் போர் புரிந்தான். தொடர்ந்து, பல்வேறு அவதாரங்கள் எடுத்து, போரிட்டு வீழ்ந்தான்.முடிவில், சூரபத்மனாக முருகப்பெருமானிடம் போரிட்டான். ஆணவத்தை அழித்து, அவதார மகிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில், செந்திலாண்டவர் வேலால் சூரபத்மனை, மாலை, 5:40 மணிக்கு வீழ்த்தினார். அவன், சேவலாகவும், மாமரமாகவும் மாறி, முருகனிடம் தஞ்சம்அடைந்தான்.சூரனின் தலையை முருகன் கொய்ததும், விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, விரதத்தை நிறைவு செய்தனர். பின், சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில், பக்தர்களுக்கு காட்சிளித்தார். இன்று, முருகன் - தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar