கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் பிரமோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2012 11:02
நகரி : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டு வரும், சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு பெரிய சேஷா வாகனத்தில் உற்சவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சீனிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை சிறிய சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவையொட்டி, மூலவரை அலங்கரிக்கப்பதற்காக திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து, தங்க கிரீடம் கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கிரீடத்தை சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு அணிவிப்பதற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், பக்தர்கள் தயார் செய்து, 2001ம் ஆண்டு காணிக்கையாக வழங்கினர்.