பேரூர்:மருதமலை சூரசம்ஹார விழாவுக்கு, மதியத்துக்கு மேல், வாகனங்கள் அனுமதிக்கப் படாததால், அப்பாவி பக்தர்கள் பரிதவித்தனர்.முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுவது, மருதமலை திருக்கோவில். இக்கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று (நவம்., 13ல்) நடைபெற்றது.
உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.அப்போது, மலைமேல் உள்ள பார்க்கிங் பகுதி நிரம்பியதாக கூறி, வாகனங்களில் வந்த பக்தர்களை அனுமதிக்கவில்லை. கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்சில் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டனர். பஸ்களையும் குறித்த நேரத்தில் இயக்காததால், நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதனால், படிக்கட்டுகளில் நடந்து செல்ல முடியாத முதியவர்கள், குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர்.