பதிவு செய்த நாள்
15
நவ
2018
01:11
செஞ்சி:செஞ்சி, அருணாசல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது.செஞ்சி, பீரங்கிமேட்டில் உள்ள அருணாசல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று (நவம்., 14ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று (நவம்., 14ல்) காலை 8 மணிக்கு அருணாசல ஈஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். 9:00 மணிக்கு கலச பிரதிஷ்டையும், மகா கணபதி ஹோமமும் நடந்தது. 10:00 மணிக்கு கொடி மரத்திற்கு கலச பூஜையும் தொடர்ந்து கொடியேற்றிமகா தீபாராதனயும் நடந்தது.
இன்று (15ம் தேதி) மாலை ருத்ர ஹோமம், 16ம் தேதி லட்சுமி ஹோமம், 17 ம் தேதி சத்ரு சம்ஹார ஹோமம், 18ம் தேதி வியாபாரவசிய ஹோமம், 19ம் தேதி கல்வி வரம் பெற ஹோமம், 20ம் தேதி லட்சுமி குபேர ஹோமம், 21 ம் தேதி காரியசித்தி ஹோமம், 22ம் தேதி ஸ்வர்ணகர்ஷன பைரவ ஹோமம் செய்ய உள்ளனர்.23ம் தேதி காலை 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு மகா தீபமும் ஏற்ற உள்ளனர்.