திருப்பரங்குன்றம் மகா தீபம்: நவ.23க்கு தீப கொப்பரை தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2018 12:11
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் மலைமேல் நவ.,23ல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் கோயில் மண்டபம் அருகே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை, 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி திரி, 5 கிலோ சூடம் பயன்படுத்தப்படும்.காடா துணியால் திரி தயாரித்து, அதை நெய்யில் ஒரு நாள் ஊற வைக்கப்படும்.திரி தயாரிக்க திருவண்ணாமலையிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 3 நாட்கள் தீபம் எரியும். தீபம் ஏற்றப்படும் கொப்பரை தற்போது தயாராக கோயில் கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.