பதிவு செய்த நாள்
18
நவ
2018
12:11
திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் கடும் பனிப்பொழிவு நிலவியதால், வாகனஓட்டிகள், பக்தர்கள் அவதியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கஜா புயல் தாக்கத்தால், நேற்று முன்தினம் இரவு வரை, விட்டுவிட்டு மழை பெய்தது. இதில், ஆரணி, 16 மி.மீ., செய்யாறு, 4.50, செங்கம், 27, சாத்தனூர் அணை, 31.80, வந்தவாசி, 23, போளூர், 26, திருவண்ணாமலை, 39.60, தண்டராம்பட்டு, 14.50, கலசப்பாக்கம், 14.60, சேத்துப்பட்டு, 30, கீழ்பென்னாத்தூர் 30, வெம்பாக்கம், 11.30 மி.மீ., என மழையளவு பதிவானது. நேற்று காலை, திருவண்ணாமலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காலை, 9:00 மணி வரை, முகப்பு விளக்கை எரியவிட்டபடியே, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தீப திருவிழாவினை முன்னிட்டு, கிரிவலம் சென்ற பக்தர்கள் அவதியடைந்தனர்.