பதிவு செய்த நாள்
19
நவ
2018
01:11
கரூர்: பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 32வது ஆண்டு விழா இன்று (நவம்., 19ல்) துவங்குகிறது. கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே, இன்றிரவு, 7:00 மணிக்கு, சர்வதேவதா பிராத்தனையுடன் விழா துவங்குகிறது.
நாளை (நவம்., 20ல்) காலை, 5:30 மணிக்கு, மூர்த்தி ஹோமம், மஹா அபிஷேகம், 10:00 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு, 7:00 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. வரும், 24 காலை,
7:00 மணிக்கு சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், இரவு, 7:00 மணிக்கு மங்கள இசை, 25ல் சர்வ மங்கள ஹோமம், மாலை, குத்துவிளக்கு பூஜை, இரவு, 8:00 மணிக்கு பட்டிமன்றம் நடக்கிறது.
வரும், 26 காலை, அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் ஊர்வலம், மதியம் அன்னதானம், இரவு, பக்தி இசைக் கச்சேரி நடக்கிறது.