ரபியுல்அவ்வல் 12ம் நாளில் நபிகள் நாயகம் பிறந்தார். இந்த நாளையே மிலாடி நபி என்கின்றனர். அவரது அறிவுரைகளைக் கேட்போம். ● கடமையில் கவனமாக இருக்க வேண்டும். தங்களுக்கு தரப்பட்டுள்ள பொறுப்பை அக்கறையுடன் செய்ய வேண்டும். ● ஒரு குடும்பத்தில் மனைவி, பெற்றோரை திருப்திப்படுத்தும் பொறுப்பை ஆண்கள் ஏற்க வேண்டும். பெற்றோரிடம் நல்ல முறையில் நடப்பது போல மனைவிக்கும் உபகாரம் செய்ய வேண்டும். ● உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ● தலைவர் நாட்டின் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ● குடும்பத்தின் பொறுப்பாளர், அவர் தம் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவார். (அவர்களை நன்றாகக் கவனித்தாரா என கேட்கப்படும்) ● பெண் தனது கணவரின் வீட்டிற்கு பொறுப்பாளர். அவள் அந்த பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். ● பணியாளன் தனது எஜமானனின் செல்வத்திற்கு பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். ● ஒவ்வொருவரும் அவரவர்களின் பொறுப்பு உணர்ந்து கடமையாற்ற வேண்டும்.