1920 ஜூன் 20ல் திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்காவில், பாரதியார் பேசும் போது, “முகம்மதுநபியிடம் கலங்காத நெஞ்சுரம், ஞான தீரம், அழியாத நம்பிக்கை இருந்தன. ஆதலால் அவருக்கு எடுத்த காரியம் யாவினும் வெற்றி! எங்கும் வெற்றி எதிலும் வெற்றி. அவர் வேண்டும் முன்னரே அருளினார் அல்லாஹ். அவர் மகாசுந்தர புருஷர், மகாசூரர், மகாஞானி, மகா பண்டிதர், மகா பக்தர்” என்றார்.