பதிவு செய்த நாள்
21
நவ
2018
02:11
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம், சத்தியமூர்த்தி நகரில் மிகவும் பழமையான மாதேஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை தீபம், சோமவார பூஜை, காலபைரவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளன.சோமவார முதல்நாள் பூஜை நேற்று முன்தினம் (நவம்.,19ல்) மாலை துவங்கியது. இரண்டாம் பூஜை வரும், 26ம் தேதியும், மூன்றாவது பூஜை, டிச., 3, நான்காவது பூஜை, 10ம் தேதி நடைபெற உள்ளன. இந்நாட்களில் சிவசகஸ்ரநாம பாராயணம் நடைபெறும்.
வரும், 23ல் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மூலவருக்கு பாலாபிஷேகம், பாலமுருகர், ஜெய விஜய சிவ சண்முகருக்கு பூஜை, மாலை, 4:00க்கு காசிலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
நடைபெறும். மாலை, 6:00க்கு கார்த்திகை தீபம் ஏற்றி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் படும்.வரும், 30ல் கால பைரவர் ஜெயந்தி விழா நடைபெறும். அன்று மாலை, 4:00க்கு சிறப்பு
வேள்வி, 54 வகை மூலிகை அபிஷேகம், மகாதீபாராதனை நடக்கிறது. டிச., 3ல் மூலவருக்கு, 108 சங்காபிஷேகம், 7ல் பைரவர் சஷ்டி கவசம் பாராயணம், 13ல் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக்குழு செய்து வருகிறது.