பதிவு செய்த நாள்
23
நவ
2018
02:11
உடுமலை:ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இன்று (நவம்., 23ல்)கார்த்திகை ஜோதி விழா நடக்கிறது.மடத்துக்குளம், ஒன்றியம் பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இன்று நவம்., 23ல், பகல், 11:30 மணிக்கு மூலவர் அபிஷேகம், ராஜஅலங்காரம், தீபாராதனை, மாலையில் உற்சவர் அபிஷேகம், மாலை, 6:30 மணிக்கு மகா தீப ஜோதி தரிசனம் நடக்கிறது. இரவு, வள்ளி தெய்வானை சமேத ஞானதண்டாயுத பாணி சுவாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.