பதிவு செய்த நாள்
23
நவ
2018
02:11
ஈரோடு: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, ஈரோட்டில் அகல் விளக்கு விற்பனை, நேற்று விறுவிறுப்பாக நடந்தது. கார்த்திகை தீபம், இன்று கொண்டாடப்படுகிறது. வீடு மற்றும் நிறுவனங்களில், விளக்குகள் ஏற்றி, பலர் கொண்டாடுவர்.
இதையொட்டி, அகல் விளக்கு விற்பனை, நேற்று (நவம்., 22ல்) களை கட்டியது. ஈரோட்டில், அகில்மேடு வீதி, பிரப் ரோடு, நேதாஜி ரோடு உட்பட பல இடங்களில், விறுவிறுப்பாக விற்பனை நடந்தது.மண் விளக்குகள், வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்டவை, தெய்வ உருவங்கள், கைகள், மலர்களில் விளக்கு வடிவம் கொண்டவை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ரூபாய் முதல், 85 ரூபாய் வரையிலான விலையில் ஏராளமான விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. விழாவை முன்னிட்டு, வீடு, கடைகளின் முன்புறம் சாணமிட்டு பூசி, கோல மிட்டு, விளக்குகளால் தீபம் வைத்து, நேற்றிரவு (நவம்., 22ல்) முதலே, பலர் விழாவை கொண்டாட துவங்கி உள்ளனர்.