கடலூர் திருமாணிக்குழியில் இன்று (நவம்.,24ல்) ரோகிணி தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2018 12:11
கடலூர்: திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இன்று 24ம் தேதி மாலை மலை மீது ரோகிணி தீபம் ஏற்றப்படுகிறது.
கடலூர் அடுத்த திருமாணிக்குழியில் உள்ள வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை பிரமோற்சவ விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. தினமுமம் காலை சிறப்பு பூஜை, இரவு 7:00 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. நேற்று (நவம்., 23ல்) காலை 9:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. தேரை கலெக்டர் அன்புச்செல்வன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இரவு பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு நடந்தது.
இன்று 24ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் தேரடி பார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 5:30 மணிக்கு மலை மீது ரோகிணி தீபமும் ஏற்றப்படுகிறது. பிரமோற்சவ விழா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் முத்துலட்சுமி, திருக்கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.