பதிவு செய்த நாள்
24
நவ
2018
03:11
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரா கோவிலில் சத்யநாராயண பூஜை நடந்தது.பவுணர்மியை முன்னிட்டு நேற்று (நவம்., 23ல்) ராகவேந்திரருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சத்யநாராயண பூஜையையொட்டி சுதர்சன ஹோமம், மகா தன்வந்தரி ஹோமம் நடந்தது. பூஜைகளை, ரகு ஆச்சாரியார், ரமேஷ் ஆச்சாரியார் செய்தனர். சுதர்சன ஹோமத்தை, வாதிராஜ ஆச்சாரியார் துவக்கி வைத்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ராகவேந்திர சுவாமிகள் புனித தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் உதயசூரியன், கதிர்வேல், நரசிம்ம ஆச்சாரியார், ரகு ஆச்சாரியார் உட்பட பலர் பங்கேற்றனர்.