பதிவு செய்த நாள்
15
பிப்
2012
11:02
கடலூர் :கடலூர் அடுத்த அரிசிப்பெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில் வரும் 20ம் தேதி இரவு 7 மணிக்கு சக்கரபாணி பெருமாளுக்கும், விஜயவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி அன்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம் மூலவர் சக்கரத்தாழ்வார் பால் திருமஞ்சனம், 7 மணிக்கு மூலவர் விஜயவல்லி தாயார் விசேஷ திருமஞ்சனம், மாலை 4 மணிக்கு மாப்பிள்ளை பெண் வீட்டார் சீர் கொண்டு வருதல், 5 மணிக்கு பெருமாள் தாயார் புறப்பாடு, 5.30 மணிக்கு பூப்பந்து விளையாட்டு வைபவம், 6 மணிக்கு ஊஞ்சல் சேர்த்தி சேவை, 6.50 மணிக்கு பட்டு வேஷ்டி, கூரை புடவை சமர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சக்கரபாணி பெருமாளுக்கும், விஜயவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம், சக்கரபாணி பெருமாள், விஜயவல்லி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.