கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 20ம் தேதி சிவராத்திரி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2012 11:02
கடலூர் :கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வரும் 20ம் தேதி மகாசிவராத்திரி உற்சவம் நடக்கிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் கோவில் வரும் 20ம் தேதி மகா சிவராத்திரி உற்வசம் நடக்கிறது. இதனையொட்டி வரும் 20ம் தேதி பாடலீஸ்வரருக்கு நான்கு கால விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கு, காலை 5 மணிக்கு அதிஉன்னத அதிகார நத்தி கோபுரதரிசனம் நடக்கிறது. உற்சவத்திற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜெகன்நாதன், செயலர் அலுவலர் மேனகா ஆகியோர் செய்து வருகின்றனர்.